பருவதமலையில் காட்டுத்தீ - "இயற்கையின் அழிவும் மனித தவறுகளும்"


பருவதமலை - ஆன்மீகமும் இயற்கையும்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டத்திற்குட்பட்ட தென் மகா தேவமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ளது 4560 அடி உயரம் உடைய பருவதமலை. மலை உச்சியில் மல்லிகார்ஜுனார்- பிரம்மராம்பிகை அம்மாள் ஆகிய தெய்வங்கள் உள்ள பிரபல கோவில் உள்ளதால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

காட்டுத்தீ - நடந்த நிகழ்வு மற்றும் ஏற்பட்ட விளைவுகள்:

ஆன்மீக தலமான பருவதமலை பல்வேறு மூலிகைகளையும் பல்வேறு உயிரினங்களையும் உள்ளடக்கியுள்ளது. குறிப்பாக மான் காட்டுப்பன்றி, மயில், முயல், முள்ளம்பன்றி மற்றும் பல உயிரினங்கள் பறவைகள் பருவதமலையில் வாழ்கின்றன.

பர்வத மலையின் குறுக்கு வெட்டு தோற்றம்

இந்த நிலையில் நேற்று ஜூலை 20 ஞாயிற்றுக்கிழமை அன்று திடீரென பருவதமலைகள் காட்டுத்தீ ஏற்பட்டது. இதனால் பல்வேறு மூலிகை மரங்கள், தாவரங்கள் உட்பட பல்வேறு காட்டுவாழ் உயிரினங்கள் எரிந்து நாசமானது.

இதை கட்டுக்குள் கொண்டு வராமல் வனத்துறை காவலர்கள் கண்டுகொள்ளாமல் இருந்தது தான் வேடிக்கையாக இருந்தது. பாவம் அவர்கள் மட்டும் என்ன செய்வார்கள் மலைக்கு மேல் நடந்தது இந்த தீ விபத்தை எப்படி தடுக்க முடியும்? 

தீயின் பின்னணி - மனித தவறுகள்:

சில சமூக விரோதிகள் மர்ம நபர்கள் மலைக்கு சென்று தீ வைத்து விட்டு வந்துவிடுகிறார்கள். அல்லது அவர்களுக்கு தெரியாமல் கூட தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. அதை கண்டும் காணாமல் மலையில் இருந்து கீழே இறங்கி வந்து விடுகிறார்கள்.

சில பேர் வேண்டும் என்று பருவதமலையில் காலங்காலமாக வனத்துறை காவலர்களுக்கு தெரியாமல் வேட்டையாடி வருகிறார்கள். அவர்கள் தங்கள் வேட்டையாடுவதற்கு வசதியாக காட்டைக் கொளுத்தி விடுகிறார்கள். அது மட்டுமல்லாமல் அந்த தீயில் மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட பல உயிரினங்கள் சிக்கி இறந்துவிடும்.

அவை இறந்த பிறகு வேட்டைக்காரர்கள் அதை எடுத்து செல்வதற்கு வசதியாக இருக்கும் என்கிற காரணத்தினால் வனவிலங்குகளை கொன்று சாப்பிடுவதற்காக எவ்வித சிரமமும் படாமல் காட்டைக் கொளுத்தி விடுகிறார்கள். இதனால் பல உயிரினங்கள் இறப்பதோடு மட்டுமல்லாமல் பல்வேறு மூலிகை மரங்கள் எரிந்து நாசமாகிறது. இதை இந்த அறிவற்ற முட்டாள்கள் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள். 

பர்வத மலையில் தீ பரவி எரிந்த காட்சி

சட்டம் மற்றும் நடவடிக்கைகள்:

காட்டில் தீ வைப்பது சட்ட விரோதமாக குற்றமாகும். இந்த குற்றத்தை செய்பவர்கள் மீது வனத்துறை காவலர்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். காட்டில் வன உயிரினங்களை வேட்டையாடுவோம் வனத்தை கொளுத்தி விடவும் யாருக்கும் எந்த ஒரு அதிகாரமும் இல்லை. 

நேற்று மட்டுமல்லாமல் பல முறை நமது பர்வத மலையில் காட்டு தீ ஏற்பட்டு பல்வேறு இடங்கள் எரிந்து நாசமாகி இருக்கிறது. இந்த கொடுமை வெயில் காலத்தில் அதிகமாக இருக்கும் என்றால் மழை காலத்திலும் தொடர்ந்து நடப்பது தான்.

குறிப்பாக வெயில் காலங்களில் வன உயிரினங்கள் ஏற்கனவே தண்ணீர் இல்லாமல் மிகவும் சிரமத்தில் இருக்கும். அப்பொழுது மலையில் விறகு வெட்ட செல்லும் மர்மநபர்கள் அதிகமான மஞ்சுப்புல் புற்கள் நீண்டு வளர்ந்து காய்ந்து காணப்படுவதால் அவர்களால் மலைக்கு மேலே ஏறி சென்று விறகு வெட்டி வர முடியாது. ஏனென்றால் மஞ்சு புல் புற்கள் அதிக அரிப்பு தன்மை உடையது ஆதலால் உடம்பில் பட்டால் அதிக தொடங்கிவிடும். 

இதனால் அந்த மர்ம நபர்கள் மஞ்சு புக்கலை அழிப்பதற்காக தீ வைத்து விடுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் மஞ்சு புல் எளிதாக எரியக்கூடியது; அதிலும் வெயில் காலத்தில் சொல்லவே தேவையில்லை கொழுந்து விட்டு மளமளவென எரியும். மலை இரவோடு இரவாக எரிந்து நாசமாகிவிட்ட பிறகு மறுநாள் எழுந்து சென்று அந்த மர்ம நபர்கள் விறகு வெட்டி வருவார்கள். 

இயற்கை வளங்கள் பாதிப்பு:

இதுபோல அசம்பாவிதங்களை விபத்துகளை யாரும் பருவதமலையில் நிகழ்த்தி வன உயிரினங்களையும் மூலிகை மரங்களையும் செடி கொடிகளையும் அழிக்க வேண்டாம்! என்று பருவதமலை பாதுகாப்பு குழு இயக்கம் கேட்டுக்கொள்கிறது.

சுற்றுச்சூழல் சமநிலை பாதுகாப்பு இதனால் பாதிக்கப்படுகிறது.

வனவிலங்குகளுக்கு தண்ணீர் இல்லாமல் பெரும் சிரமம் ஏற்படுகிறது.


சிறப்புரை:

பருவதமலை என்பது ஆன்மீகத்திற்கு மட்டுமல்ல இயற்கை வளம் நிறைந்த பகுதியாகும். காட்டு தையால் இயற்கை வளம் அழிவு மற்றும் மரங்கள், உயிரினங்கள், மூலிகை தாவரங்கள் - இவை அனைத்தும் நம்மை விட்டு அழிந்து போகின்றன. எனவே நாம் விழிப்புடன் செயல்பட வேண்டும். இயற்கையை பாதுகாப்போம் பருவத மலையை பாதுகாப்போம்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url